Ads Area

மதரஸா மாணவர்கள் மீது நடந்த கொடூரம் - உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டம்,  பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மருதமுனை மதரஸாவொன்றில்  மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


தற்போது ஏற்பட்டுள்ள சூடான காலநிலையில் நீண்ட நேரம் வெளியே செல்ல வேண்டாமென சுகாதார, கல்வியமைச்சு போன்றவை அறிவுறுத்தல் வழங்கிய நிலையிலும் மருதமுனை மதரஸா மெளலவியொருவர் சிறு வயதையுடைய மானவர்களுக்கு இவ்வாறான சித்திரவதையை மேற்கொண்டுள்ளார்.


புனித ரமழான்  மாதத்தில் நோன்பாளியாக இருக்கும் நிலையில், சிறு வயதை உடைய இம்மாணவர்களின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.


இச்சம்பவம் எப்போது இடம்பெற்றதென உறுதிப்படுத்த முடியாவிடினும், அண்மையில் எடுக்கப்பட்ட சம்பவமாகவே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கடந்த வருடம் சாய்ந்தமருதில் மதரஸா மாணவனின் மர்ம மரணம்  சம்பவம் பதிவாகியது. 


எனவே, மதரஸாக்களின் நிலையும் அங்கு கற்பிக்கும் உலமாக்களின் நிலையும் தொடர்ந்தும் இவ்வாறு இருக்குமாக இருந்தால், நமது நாட்டிலுள்ள மதரஸாக்களின் நிலைக்கு பொறுப்புக்கூறுவது யார்? இது சம்பந்தமாக மதரஸாக்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe