Ads Area

கிறிஸ்தவ தேவாலயங்களுக்குபலத்த பாதுகாப்பு - கல்முனை பிரதேச தேவாலயங்களிலும் உறுதிப்படுத்தப்படும் பாதுகாப்பு.

 பாறுக் ஷிஹான்.


புனித வெள்ளிக்கிழமையான 29ம் திகதியும் உயிர்த்த ஞாயிறு தினமான 31ம் திகதியும் நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை சோதனையிடும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடி நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அனைத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


இதனண்டி சமூக பொலிஸ் குழுக்்ள், அந்தந்த தேவாலயங்களின் பாதிரிமார்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


மேலும், பொலிஸ் நிலையங்களுக்குப் பொறுப்பான மாவட்ட அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் ஒவ்வொரு பொலிஸ் பகுதியிலுமுள்ள தேவாலயங்களுக்குச் சென்று பாதுகாப்புப் பணிகளை சரி பார்க்க வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


குறித்த உத்தரவிற்கமைய கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் சென்ற பொலிஸ் குழு கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து தேவாலயங்களின் பொறுப்பாளர்களைச் சந்தித்து வருவதுட, தேவையான பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இது தவிர, கல்முனை பிராந்தியத்தில் இராணுவம் பிசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கையையும் என்றும் இல்லாதவாறு  முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe