சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட வலிந்துதவு சமூக சேவைகள் அமைப்புக்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஜனாப் S.L.முகம்மது ஹனிபா அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் அடிப்படையிலும் உதவி பிரதேச செயலாளர் ஜனாப் U.M.அஸ்லம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழும் அண்மையில் 30.04.2024 செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற வலிந்துதவு சமூக சேவைகள் அமைப்புக்கள் கலந்து கொண்டு தங்களுடைய வேலைத்திட்ட முன்னேற்றங்கள் மற்றும் பிரதேச மட்ட வலிந்துதவு சமூக சேவைகள் அமைப்புக்களின் ஒன்றியம் அமைத்தல் தொடர்பாகவும் எதிர்காலத்தில் திட்டம் ஒன்றினை வரைந்து சம்மாந்துறை பிரதேசத்தின் சமூக அபிவிருத்தி தொடர்பாக ஒருங்கினைந்த வினைத்திறனான செயற்றிட்டம் ஒன்றின் அவசிய தேவைப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இன்றைய நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஜனாப் J.M.ஜெமீல் , சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப் அ.அகமட் சபீர் , சமூக சேவைப்பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஜனாபா பஸீல் , சமூக சேவைப்பரிவின் அபிவிருத்தி உத்தியேகத்தர்கள் , GAFSO நிருவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜனாப் A J.காமில் இம்டாட் மற்றும் வலிந்துதவு சமூக சேவைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.