Ads Area

அசெளகரியங்களை ஏற்படுத்தும் வீதி விளையாட்டுக்கள் - நடவடிக்கை எடுக்கப்படுமா?

 பாறுக் ஷிஹான்.


மைதானத்தில் விளையாட வேண்டிய விளையாட்டுக்களை பொதுப்போக்குவரத்து வீதியில்    சட்டவிரோதமாக சிலர் குழுவாகக்கூடி விளையாடுவதை அன்றாட நடவடிக்கையாகக் கொண்டிருக்கின்றார்கள்.


காலை முதல் மாலை வரை பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்கதையாகி வருகின்றன.


அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல வீதிகளிலும் கிரிக்கட், காற்பந்து பல்வேறு விளையாட்டுக்களை சிறுவர்கள் முதல் வயது வந்த பெரியோர்கள் வரை விளையாடி வருகின்றார்கள்.


ஆனால், இவ்வாறு விளையாடுபவர்களுக்கு பொதுப்போக்குவரத்தினை இடையூறு செய்வது தெரியாத விடயமல்ல.


அம்பாறை மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் இவ்வாறான சட்டவிரோத விளையாட்டுக்கள் இடம்பெறுவதும் பின்னர் பிரச்சினைகளால் நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளன.


எனவே இவ்வாறான வீதி விளையாட்டுக்களை கட்டுப்படுத்த நானனைவரும் முன்வர வேண்டும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe