சவுதி அரேபியாவின் மன்னர் சலமான், காய்ச்சல் மற்றும் மூட்டுவலியால் அவதிபட்டு வந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஜித்தாவில் உள்ள அல் சலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர் குழு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக சவுதி ராயல்கோர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மன்னர் சல்மானுக்கு தொடர் சிகிச்சை.
தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களை பரிசோதனை செய்ததில் அவரது நுரையீரலில் நிம்மோனியா பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் தொற்று குணமாகும் வரை நிபுணர் குழுவின் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என ராயல் கோர்ட் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
தகவல் - சவுதி நிவூஸ் - Saudi Tamil news