ஷாதிர் ஏ ஜப்பார்.
கடந்த வெள்ளிக்கிழமை (10.05.2024) இவ்வுலகை விட்டு பிரிந்த சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் செய்ட் உமர் மௌலானா சேர் அவர்களின் மறுமை ஈடேற்றதிற்காக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் துஆ பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வானது சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் கே.எம்.ஏ முத்தலீப் அவர்களின் ஏற்பாட்டில் பிரதி அதிபர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் காலை ஆராதனையில் இடம்பெற்றிருந்தது.
துஆ பிரார்த்தனை கண்ணியத்துக்குரிய உலமா அ.கலீல் அவர்களினால் நிகழ்த்தப்பட்டிருந்ததுடன், பாடசாலையின் ஆசிரியர் யூ.எல் ஏ ஜப்பார் அவர்களினால் மறைந்த பணிப்பாளரின் சேவையினை நினைவுகூர்ந்து சில நிமிடங்கள் நினைவுபகிர்வும் இடம்பெற்றிருநந்தமை குறிப்பிடதக்கது.