(ஏ.பி.எம் இம்றான்)
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் மகேந்திரகுமார் அவர்களுக்கு ஆசி வழங்கியும் பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வேண்டிய நடவடிக்கைகளுக்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கவும் தயாராக இருப்பதாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினர் சமீபத்தில் வலயக்கல்வி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று மேற்படி உறுதிமொழியை வழங்கி உள்ளனர்.
இதன்போது சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பொருளாளர் ஏ. ஆர்.ரஷீத் உபசெயலாளர் எம். ரியால் பினக்கு தீர்ப்பு பொறுப்பாளர் எம். எஸ். அப்துல் மஜீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.