கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம் எம் முஷாரப் அவர்களது 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தின் நீண்ட காலத் தேவையாக இருந்த போட்டோ கொப்பி இயந்திரம் இன்று கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் கௌரவ உறுப்பினர் ஏசி எம் சஹில் மற்றும் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் அரஃபாத் முகைதீன் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர்கள் பெற்றார் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மாணவ மாணவிகள் குறித்த நிகழ்வின் கலந்து கொண்டனர்.