சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்த அனைவரும் கண்டிப்பாக அவர்களது விசா காலாவதி ஆவதற்கு முன்னதாக சவுதி அரேபியாவை விட்டு வெளியேற வேண்டும் என ஹஜ் உம்றா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசா காலாவதி ஆன பிறகும் நாட்டில் தங்குவது அபராதத்திற்குரிய குற்றமாகும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஹஜ் விசாவில் வந்தவர்கள் ஹஜ் கடமையை மட்டுமே நிறைவேற்ற அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் நாட்டில் வேலை செய்யவோ, சவுதியில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கோ தகுதி பெற்றவர்கள் ஆக மாட்டார்கள் எனவும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.