பாறுக் ஷிஹான்.
நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 சந்தேக நபர்களை கைது செய்த பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனைப் பகுதியிலுள்ள நிறமூட்டும் தொழிற்சாலையில் நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கடந்த திங்கட்கிழமை (29) இரவு இரகசியத்தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய செயற்பட்ட பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதுடன், ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த 4 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் 20, 18, 17, 17, வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன், சந்தேக நபர்கள் வசமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.