பாறுக் ஷிஹான்.
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (30) மாலை ஐஸ் போதைப்பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இறக்காமம் விசேட புலனாய்வுப்பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசியத்தகவலின் அடிப்படையில் இறக்காமம் பொலிஸ் நிலையப்பெறுப்பதிகாரி ஜே.எம்.மஹிந்த சேனரத்ன வழிகாட்டலுக்கமைவாக விசேட புலனாய்வுப்பொறுப்பதிகாரி ஜே.எம்.பி.கலந்த சூரிய தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 6,200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்களான தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.