சவுதி அரேபியா மக்கா நகரில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தில் ஒட்டகங்கள், கால்நடைகள் அடித்துச் செல்லப்படும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
மக்காவில் தற்போது செய்து வரும் கனமழையால் மக்கா நகர பள்ளத்தாக்குகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை, புழுதிப் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழையால் மக்கா நகரத்திற்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை மக்காவில் உள்ள அல்-ஜும்மில் உள்ள பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஒட்டகங்கள், கால்நடைகள் மற்றும் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.