பாறுக் ஷிஹான்.
அறுவடை செய்யப்பட்ட வயற்பகுதியில் மர்மமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை சின்ன கொக்கநாரை வயற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
யானையின் சடலம் இருப்பதை அவதானித்த விவசாயிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த யானையின் சடலம் மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது.
மேலும், குறித்த யானையின் இறப்பு தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், யானையின் இறப்புக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
வனஜீவராசிகள் திணைக்களம் குறித்த யானையின் மரணம் தொடர்பான காரணத்தை உடற்கூற்று மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் எனத்வ்தெரிவித்துள்ளனர்.