Ads Area

அவமானங்களை கடந்து அறிவிப்பாளரான சம்மாந்துறை தாரிக் முஹம்மத்.

அம்பாறை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சம்மாந்துறை எனும் ஊரில் பிறந்தவர் ஊடகத்தில் தரம் 5 இல் இருந்தே ஆர்வம் இருந்தது.


எதிர்காலத்தில் வானொலி தொலைக் காட்சி அறிவிப்பாளர் ஆக வருவதே இவரது கனவாக இருந்தது.


சது / தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத் தில் சாதாரண தரம் வரை கற்றார்.


உயர்தரக் கல்விக்காக கணிதப் பிரிவில் சம்மாந்துறையின் தாய் பாடசாலையும் தேசிய பாடசாலையான முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் இணைந்து கற்றார். அப்போதே ஊடகத்துறையில் கொண்ட தீராத காதலால் ஊடகத் துறையிலும் இணைத்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் தொடங்கியது.


இவரது ஊடகக் கனவில் முதலாவது ஒலி வாங்கி 0/1 தின விழாவில் கையில் கிடைத்தது. மேடையில் என்ன பேசுவது என்பதை காகிதத்தில் எழுதியே முதலில் ஒலிவாங்கியில் அறிவித்தார் 'தேனீரை குடிப்பவருக்குதான் அதில் சீனி அளவுக்கு சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியும்..இந்த ஒரு கூற்று இவர் வாழ்க் கையில் ஊடக கனவை வலு பெற செய்தது.


புகழ் பூத்த மூத்த அறிவிப்பாளர் மர்ஹூம் ARM Jifry அவர்கள் சொன்ன சில விடயங்களை இவர் வாழ்க்கையில் செயல்படுத்த ஆரம்பித்தார்.


இவருக்கு முதலாவது ஒலி வாங்கி தந்து அழகு பார்த்தவர் அவுஸ்திரேலிய விருது பெற்ற சம்மாந்துறை கவிஞர், பாடலாசி ரியர், எழுத்தாளர், தமிழ் பாட ஆசிரியர் MI அச்சு முஹம்மது அவர்கள். இலங்கை யின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான கொழும்பு ஆனந்தா கல்லூரி ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டு மூன்று சுற்றுகளாக நடாத்திய நாடளாவிய ரீதியிலான பாட சாலை மட்ட அறிவிப்பாளர் போட்டியில் இவருக்கு முதலிடம் கிடைத்தது.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடாந்தம் நடத்தும் நாடளாவிய ரீதியி லான அறிவிப்பாளர் போட்டியில் சிறந்த இடங்கள் கிடைத்தது. பாடசாலை மட்ட தமிழ்த்தினப் போட்டி மற்றும் ஏனைய அறிவிப்பாளர் போட்டிகளில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களை பெற் றார். கல்வியை தொடர்ந்து கொண்டிருக் கும் போதே அறிவிப்பாளர் போட்டியில் வெற்றியை பதிவு செய்தாலும் ஆதரவு வழங்கி உற்சாக படுத்துவதற்கு பாடசா லையை தவிர வேறு யாரும் முன்வர வில்லை.


சிறகு உடைந்த பறவை ஆகவே தனது கனவு மாறுமோ என்ற ஏக்கத்தில் முக்கோ ணத்தின் மூன்று மூலைக்குள் அகப்பட்டது போல் சிக்கித்தவித்தார்' இதற்கு காரணம் கல்வியோடு சேர்த்து கலையை வளர்த்துக் கொள்ளாதே என்று பலர் தடுத்தது. ஆனாலும் சிறிதளவும் முயற்சியை கைவிடாமல் பயணித்தார்.


அறிவிப்பு துறையில் சந்தர்ப்பம் கேட் கும்போது பல இடங்களில் அவமானம் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு இலங்கையில் அவமானங்களை கடந்து அறிவிப்பாளராக துடிக்கும் தாரிக் முஹம்மத் முன்னணி வானொலிகளில் ஒன்றான Capital FM இன் கலையகத்தில் இரண்டு மணித்தியாலங்கள் மூத்த அறிவிப்பாளர் ST.Romஅவர்களுடன்இணைந்து ஒருநாள் அறிவிப்பாளர் அதிதியாக நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது மிகப்பெரிய ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. 2021 இல் Capital FM நாடளாவிய ரீதியிலான அறிவிப்பாளர் போட்டியை 4 சுற்றுகளாக 08 மாதங்களாக நடத்தியது.  அதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். 1500 பேர் விண்ணப்பித்து இருந்த போதிலும் நடுவர்களின் புள்ளி களுடன் ஐந்து பேருக்குள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.


இதிலிருந்து இணைய வானொலி மற்றும் முகநூல் தொலைக்காட்சி போன்ற வற்றில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சந்தர்ப்பங்கள் படிப்படியாகக் கிடைத்தது. முகநூல் தொலைக்காட்சிகளான Dharu ssafa TV, வியூகம் TV மற்றும் பிராந்திய வானொலிகளிலும் ஒரு தொகுப்பாளராக இணைந்து கொண்டார். செய்தி வாசித்தல் மற்றும் விளம்பர ஒலிப்பதிவு செய்வதில் இன்னும் ஆர்வம் அதிகமாக இருந்த தால் விளம்பரத்துறையில் குரல் வடிவம் மற்றும் காணொளி வடிவம் போன்ற வற்றில் அதிக சந்தர்ப்பம் கிடைத்தது.

தற்போது 2023 இலங்கையின் சுயாதீன ஊடக வலையமைப்பான ITN - வசந்தம் FM வானொலியின் ஒரு அறிவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு தற்போது இறைவன் அருளால் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

ஊடகத்துறை என்பது விரட்டி ஒடுக்கப் படுவது அல்ல அது உணர்ந்து உயிரூட்டப் படுவது என்பதை மனதில் வைத்து இன் னும் பல சாதனைகளை ஊடகத்துறையில் படைக்க வேண்டும் என்ற கனவுகளோடு பயணிக்கும் CMU.தாரிக் முஹம்மத் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe