சவுதி நேஷனல் வங்கியின் (SNB) பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஸாலிஹ் அல்புரைஹ் அவர்கள் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களை கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைச் சமூகத்திற்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டது.
சவுதி நேஷனல் வங்கி (SNB) சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய வணிக வங்கி ஆகும். மேலும் சவூதி அரேபியாவின் உள்ளூர் வங்கி துறையைச் சீரமைத்து பொருளாதாரப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலும், சவுதி அரேபியாவின் தொலைநோக்கு - 2030 இலக்குகளை அடையச் செய்வதிலும் இவ்வங்கி முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிகழ்வில் அமைச்சர் / தூதரகத் தலைமை அதிகாரி திரு. மொஹமட் அனஸ், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலன்புரி ஆலோசகர் திரு.மங்கள ரந்தெனிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை தூதரகம்
ரியாத்
08.08.2024.