மன்னார் பிரதான வீதியிலுள்ள மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ஏசிஎம்சி) தலைவர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு நேற்று (25) அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தின் ஊடாக அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் மதுபானசாலை அமைந்துள்ளதால், அப்பகுதி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக நடவடிக்கை எடுக்குமாறு பதியுதீன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
செய்தி மூலம் - https://www.themorning.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.