Ads Area

இலங்கையிலே ஒரு Pharmacist ஆவது எப்படி...??

இலங்கையிலே ஒரு #Pharmacist ஆவது எப்படி என்கிறது பற்றியும் இந்த பதிவில் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்!!


முதல்ல, இலங்கையிலே நீங்க, ஒரு Pharmacist ஆக வேலை செய்வதற்கான அங்கீகாரத்தை எவ்வாறு பெற்று கொள்ள முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்!!


நீங்க, இலங்கையில் ஒரு Pharmacist ஆக Registered ஆவதற்கான அங்கீகாரத்தை 

 

01. Celyon Medical College Council (CMCC)

 மற்றும் 

02. Sri Lanka Medical Council (SLMC)

என்பன வழங்குகின்றன!!


இவற்றில் CMCC யில் இரண்டு வகையானயான Certificate கள் மூலம் Pharmacist ஆக Registered பண்ணப்படுகின்றது!!


( Medical Ordinance No. 26 of 1927)


❤️ 1) Certificate In Efficiency of Pharmacy

❤️ 2) Certificate In Proficiency of Pharmacy


இதில், Certificate In Efficiency of Pharmacy யில் Apprentice Pharmacist என்ற Category யில் SLMC யில் Register பண்ணுவதன் மூலம் ஒரு Pharmacist என்ற அங்கீகாரத்தை நீங்கள் பெற முடியும்!!


இதனை, External Pharmacist என்று அழைப்பர்!!


இதற்கான தகைமை A/L Bio/Maths படித்த  Chemistry Pass உடன் ஏனேய இரண்டு படங்களும் சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!


இதற்கான Written Exam, Practical, Viva என அனைத்தும் CMMC யினால் நடத்தப்படும்!!


மேலும், இரண்டு வருட காலமாக External Pharmacy ஒன்றில் Apprentice Pharmacist ஆக ஒரு Chief Pharmacist ஒருவரின் கீழ் வேலை செய்து பூர்த்தி செய்து இருக்க வேண்டும்!!


மேற்குறிப்பிட்ட அனைத்து தகைமையுடன் விண்ணப்பித்து மூன்று பரிட்சைகளிலும் சித்தியடைந்தவர்களுக்கு SLMC யினால் ஒரு Registration Number வழங்கப்படும்.


அதனை கொண்டு National Medical Regulatory Authority (NMRA) யில் விண்ணப்பிப்பதன் மூலம் External ஆக ஒரு Pharmacy யினை #மாத்திரம் நடத்தி செல்ல முடியும்!!


இது தவிர்த்து, இதனில் அரச துறை சார்ந்த தொழில் வாய்ப்பினை பெற்று கொள்ள முடியாது!! இது, அந்த யாப்பில் பதியப்பட்ட விடயம்!!


இது தொடர்பான பிரத்தியேக வகுப்புகளே பல Private Institution கள் மூலம் நடத்தப்படுகின்றது!!


இது, Certificate Level உள்ள Pharmacy யே அன்றி Diploma in Pharmacy என்பது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!


Diploma in Pharmacy என்பது Internal Pharmacist ஆக Registered பண்ணுபவர்கள் மாத்திரமே பெற்று கொள்ள முடியும்!!


இது, Para Medical மூலம் Government Pharmacist ஆக Registered பண்ணப்படுபவர்களே கருதப்படுவர்!!


( 2 வருட கற்கைநெறி)


இவர்கள், Certificate In Proficiency of Pharmacist என்ற Category யில் CMMC யிலும்  Diploma in Pharmacy/HND என்ற Category யில் SLMC யிலும் Registered பண்ணப்படுவர்!!


இதை தவிர்த்து ஒரு Pharmacist ஆக Registered ஆவதற்கு அரச பல்கலைக்கழங்கலான  University of Peradeniya, 


University of Ruhunu, University of Sri Jayawardenapure, 

University of Jaffna யில் Allied Health Science (AHS) Faculty மூலம்


 B.Pharm (Hons) Degree ஆக 4 வருட கற்கைநெறி மூலம் Degree Holder ஆக Direct ஆக SLMC யில் Registered பண்ண முடியும்!!


இவை, தவிர்த்து தற்போது 


Private Institution களான.


KDU, 

Lincon University போன்றவற்றில் 4 வருட Degree கற்கைநெறி UGC Approvel ஊடன் பணம் செலுத்தி கற்றுக் கொள்ள முடியும்!!


வெளிநாடுகளில், கற்பவர்கள் இங்கு வந்து SLMC யினால் நடத்தப்படும் Exam யில் sit பண்ணி Pass ஆவதன் மூலம் Registered Pharmacist ஆக பதிய முடியும்!!


இதில், வெளிநாடுகளில் வழங்குப்படும் Doctor of Pharmacy முடித்தாலும் Degree Holder ஆகவே Registered ஆக முடியும்!!


இவை, தவிர்த்து என்னால் அறிந்த வரை வேறு எந்த வகையிலும் Registered Pharmacist ஆக இலங்கையில் நீங்கள் பணிபுரிய முடியாது என்பதே உண்மை!!


நன்றி!!

Mlm Sameem 

B.Pharm (Hons)(R)




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe