Ads Area

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூர் மாணவிகள் மூவர் தமிழ்மொழித்தின போட்டியில் முதலிடம்.

 (அஸ்ஹர் இப்றாஹிம்)


கிழக்கு மாகாண மட்ட  தமிழ்மொழித்தின போட்டிகள் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் அவர்களின் தலைமையில் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.


நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட போட்டியில்  சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்(தேசிய பாடசாலை ) மூன்று போட்டிகளில்  முதலாம் இடத்தைப் பெற்றுத் தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 


பாடசாலை முதல்வர் எம்.ரீ.ஜனோபர் அவர்களின் கண்காணிப்பும், பணிப்புரைக்கும் அமைவாக தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டு,  தமிழ் மொழிப்பாட இணைப்பாளர் ஆசிரியர் ஏ.எம்.நஜீப் அவர்களுடன் இணைந்து தமிழ்ப்பாட ஆசிரியைகளின் தொடர் பிரயத்தனங்களுடனும் இம்மூன்று மாணவர்களுக்குமான முறையான நெறிப்படுத்தல் ஆசிரியர் மு.இ.அச்சிமுகம்மட் அவர்களால்  வழங்கப்பட்டது.


பிரிவு - 3  பேச்சுப் போட்டியில் எம் .எப்.  ஸுஹா  முதலாம் இடத்தையும், பிரிவு  - 4 கவிதை ஆக்கம் போட்டியில்  எச். எம். எப்.பஹீஜா  முதலாம்  இடத்தையும், பிரிவு -5  இலக்கிய விமர்சனம்  போட்டியில்  என்.ஏ.ஸிமா திஹான் முதலாம் இடத்தையும் பெற்றுத்  தேசிய  மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe