“வெல்லும் சஜீத்” என்ற தொனிப்பொருளில் எதிர்கால ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்துமுகமாக ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி இணையமைப்பாளரும் கிழக்கு மாகாண ஐக்கிய மக்கள் சக்தியின் கல்வி அபிவிருத்திக்குழு இணைப்பாளருமான வெள்ளையன் வினோகாந் தலைமையில் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி புதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று (31) துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு பிரசாரம் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அங்கு கருத்துத்தெரிவித்த அவர்,
நாடளாவிய ரீதியாக ஜனாதிபதித்தேர்தல் சூடுபிடித்துள்ளது. 39 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்றார்கள். இதில் வெல்லும் வேட்பாளராக சஜித் பிரேமதாச இருக்கின்றார்.
இன்று நாடு பூராகவும் சஜீத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக மக்கள் ஒன்று சேர்ந்துள்ளதைப் பார்க்கின்றோம். இன்று முதல் கட்டமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி, புதிய வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம் உள்ளிட்ட கிராமங்களில் துண்டுப்பிரசுரத்தை உத்தியோகபூர்வமாக விநியோகித்துள்ளோம்.
இதற்கமைய வீடு வீடாகவும் வீதிகளில் பயணம் செய்வோர், ஆலய நிர்வாகத்தினர், வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளோம்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஒரு தாய் மக்களாக ஒரு நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லீம்கள் ஒற்றுமையுள்ள மனிதர்களாக இணைந்து சஜித் பிரேமதாசவினை ஆதரிக்க வேண்டும்.
இன்று நாடளாவிய ரீதியாக நாம் பலப்பரீட்சையில் இறங்கியிருக்கின்றோம். அப்பரீட்சையில் நாங்கள் வெல்ல வேண்டும். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 திகதி ஜனாதிபதியாக சஜீத் பிரேமதாச வருவதை எவராலும் தடுக்க முடியாது. காரணம் இறைவனால் சொல்லப்பட்ட நியதியாக மாறி விட்டது என்றார்.