Ads Area

சம்மாந்துறையில் ரணிலுக்காக பிரசாரம் செய்யும் நிஜக்குதிரைகள் : செல்பி எடுத்து மகிழும் சிறுவர்கள்.

 பாறுக் ஷிஹான்.


கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு உயர் ரக வெள்ளைக்குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகளில் உலா வருகின்றன.


ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து குறித்த குதிரைகள் தினமும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.


மேலும், ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரக்கூட்டங்கள் இடம்பெறுகின்ற இடங்களை மையப்படுத்தி குறித்த இரு குதிரைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வருவதுடன், வித்தியாசமான முறையில் மக்களிடம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பிரசாரம் செய்து வருகின்றன.


நேற்று சம்மாந்துறை பகுதியில் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து நடைபெற்ற கூட்ட அழைப்பிற்காக குதிரைகளை ஏற்பாட்டாளர்கள் காட்சிப்பொருளாக பயன்படுத்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை என்பதுடன், இம்முறை இடம்பெறும் ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினை அவர் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe