நிலச்சரிவில் சிக்கி மண் மேட்டின் கீழிருந்து 16 வயது பள்ளி மாணவன் இன்று அதிகாலை மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்தான்.
டி.எம். மெதமஹனுவர, வத்துலியத்த, கல்லேவத்த பிரதேசத்தில் வசிக்கும் மாணவரான செனர டில்ஷான் என்பரே இன்று அதிகாலை 4:30 மணியளவில் வீட்டின் மீது மண்சரிவு வீழ்ந்ததில் இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளார்.
மிகவும் சிரமப்பட்டு சிறுவன் மீட்கப்பட்டு மெதமஹனுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அவரது 14 வயது சகோதரனும், 61 வயது பாட்டியும் நிலச்சரிவில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட போது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.