மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண் மற்றும் கருவில் இருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
திங்கட்கிழமை இரவு பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாரும் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.