சம்மாந்துறை பிரதேசத்தில் அதிகமான மக்கள் அதாவது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை (மாணவர்களை) பாடசாலைக்கு அழைத்துசெல்லும் சந்தர்ப்பத்திலும் மற்றும் பாடசாலையில் இருந்து வீட்டிற்க்கு அழைத்து செல்லும் சந்தர்பத்திலும் தலைக்கவசம் அணியாமல் வீதியில் மோட்டார்சைக்கிளில் பயணிப்பது தவறாகும்.
தலைக்கவசமின்றி செல்லும் சந்தர்பத்தில் விபத்துக்குள்ளாகின்ற வேளையில் தலையில் அடிபட்டு மரணம் வரையான உயிரிழப்புக்கள் ஏற்ப்படுவதற்க்குமான சாத்தியங்கள் அதிகமாக உள்ளமையினால் தயவுசெய்து மோட்டார்சைக்கிளில் பயணிக்கும்போது அனைவரும் பாதுகாப்பு தலைக்கவசத்தினை அணிந்து கொண்டு செல்லவேண்டும் என தெரிவித்ததுக்கொள்வதுடன் அவ்வாறு தலைக்கவசமின்றி செலுத்துபவர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்படும் என்பதனை தெரிவித்துகொள்கிறேன்.
இந்த அறிவித்தலினை தினந்தோறும் பாடசாலையில் காலை ஒன்றுக்கூடல் வேளையில் மாணவர்களுக்கு அறிவிக்குமாறு பாடசாலை அதிபரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
பொறுப்பதிகாரி
பொலிஸ் நிலையம்
சம்மாந்துறை.