Ads Area

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டியின் புகைப்படப் பிரிவில் விருது பெற்றார் சம்மாந்துறை பிரோஸ்.

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டியின் புகைப்படப் பிரிவில் (photography category) விருதினைப் பெற்றுக் கொண்டார் சம்மாந்துறையைச் சேர்ந்த விவசாய உத்தியோகத்தரும், புகைப்படக் கலைஞருமான முஹமட் பிரோஸ். அதற்கான அவருக்கு மெரிட் சான்றிதழும் (merit certification)  அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 


இவ் விருதானது கிழக்கு மாகானத்தில் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் புகைப்படப் பிரிவில்  கிடைக்கபெற்ற சிறப்பானதொரு விருதாகும்.


இவ் விருது வழங்கும் நிகழ்வானது கலாச்சார அமைச்சினால் கடந்த 13.12.2024 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. புகைப்படத் துறையில் ஒரு selfie மூலமும் விருது பெறலாம் என்பதற்கு முஹம்மட் பிரோஸ் பெற்ற இவ்விருதானது சான்றாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe