Ads Area

மாவடிப்பள்ளி விபத்தினை தடுப்பதற்கு முன் ஆயத்தம் எதுவும் செய்யாத உரிய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல்.

முஹம்மத் றிபாஸ்.


அண்மையில் (17/12/2024 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் கெளரவ நீதிபதி T. கருணாகரன் அவர்கள் முன்னிலையில் 26/11/2024 ஆம் திகதியன்று மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்த எட்டு பேர்களுக்கும் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் கௌரவ நீதிமன்றில் முன்னிலையாகி  கெளரவ நீதவான் முன்னிலையில் தனியார் வழக்கு ஒன்றினை சட்டத்தரணிகள் மூலமாக தாக்கல் செய்திருந்தனர்.


குறித்த வழக்குத் தாக்குதல் சம்பந்தமாக நேற்றைய தினம் ஆதரிப்பதற்காக கூப்பிடப்பட்டு வழக்கின் முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தினால் பரீட்சிக்கப்பட்டு  அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்யப்பட்டு பின்னர் கௌரவ நீதிபதி அவர்கள் முறைபாட்டாளரிடம் பல வினாக்களை வினவி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை கொண்டு நடத்துவதற்கு இது ஒரு சரியான  முறைப்பாடா? என்பது தொடர்பாக ஆராய்ந்து தன்னுடைய கட்டளை ஒன்றை வழங்குவதற்காக 2025. 01 .17 ஆம் திகதி  நியமித்திருக்கிறார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe