குடும்பத்தோடு ஆற்றைக்கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழப்பு - மனைவியும் பிள்ளையும் மீட்பு.
நிந்தவூர் ஆலயடிக்கட்டு பிரதேசத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மதகொன்றினூடாக ஆற்றைக்கடக்க முற்பட்ட வேளையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் ஆலயக்கட்டில் கணவனும் மனைவியும், பிள்ளையுடன் மோட்டர் சைக்கிளில் ஆற்றைக்கடக்க முற்பட்ட வேளையில், ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கிய நிலையில் மனைவியும் பிள்ளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதே வேளை, கணவன் காணாமற்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர் அப்பிரதேசத்தைச்சேர்ந்த 32 வயது இக்ராம் என்பவராவார். வெளிநாட்டில் தொழில் புரிந்து வந்த இவர் சில நாட்களுக்கு முன் நாடு திரும்பியிருந்த நிலையில், இன்றைய தினம் இவ்வனர்த்தத்தில் சிக்கியுள்ளார்.