நூருல் ஹுதா உமர்
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் நீண்ட நாள் தேவையாகக் காணப்படும் பாடசாலை பேரூந்திற்காக பாடசாலை நிர்வாகத்தினால் பேரூந்து கொள்வனவிற்கான நிதி திரட்டும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இச்செயற்றிட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 2003/2006 பழைய மாணவர் தொகுதியினர் 850,000.00 ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இந்நிதியை 2003/2006 தொகுதி மாணவர் குழாமின் பிரதிநிதிகள் அதிபர் காரியாலயத்தில் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களிடம் கையளித்தார்.
இதன் போது, நிதியுதவியளித்த அத்தொகுதி பழைய மாணவர்களுக்கு அதிபரினால் பாராட்டுப்பத்திரம் வழங்கப்பட்டது.
மேற்படி செயற்றிட்டத்திற்காக நிதியுதவி வழங்கிய 2003/2006 மாணவர் தொகுதியினருக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் இதன் போது தெரிவித்தார்.