Ads Area

"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்தில் கல்முனை கடற்கரைப் பிரதேசத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு.

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டத்திலுள்ள சுமார் 15 கடற்கரைப் பிரதேசங்களைச்சுத்தம் செய்யும் கீளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (16) கல்முனை கடற்கரைப் பிரதேசமும் சுத்தம் செய்யப்பட்டது.


கல்முனை பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை இணைந்து முன்னெடுத்த இச்சுத்தப்படுத்தும் நிகழ்வின் பிரதான நிகழ்வு கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் முன்பாகவுள்ள கடற்கரைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.


கல்முனை பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.டி.எம்.ராபி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.


கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரையை சுத்தம் செய்யும் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


''சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்'' எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்திலுள்ள கடற்கரைகளைத் தூய்மைப்படுத்துவதற்கு இச்சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் பொலிஸ், விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்பினர், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe