Ads Area

பாலமுனை, முள்ளி மலையடிப் பகுதியில் தூக்*கில் தொங்கிய நிலையில் சட*லம் மீட்பு.

 (பாறுக் ஷிஹான்)


பாலமுனை, முள்ளி மலையடிப் பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர்.


நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை, முள்ளி மலையடிப் பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலமொன்று காணப்படுவதாக அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்.


அப்பகுதியில் ஒரு கிழமைக்கு முன்னர் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக சந்தேகத்துடன் அப்பகுதிக்குச் சென்ற சிலர் குறித்த சடலத்தைக்கண்டு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.


சுமார் 35 முதல் 38 வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேர்ட் அணிந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


இம்மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை  அக்கரைப்பற்று பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe