கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகம் இணைந்து நாடறிந்த கலைஞர், கவிஞர் பாவலர் பஸீல் காரியப்பர் நினைவுப் பேருரை (19) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் சம்மாந்துறை கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.
இவ் நினைவுப் பேருரை நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் LLB, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம் நஸீர்,சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுராவின் தலைவர் எம்.ஐ.எம். அமீர் (நளீமி),தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ காதர்,
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர்,பாடகர் எம்.ஏ.எம் முபாரிஸ்,அம்பாறை மாவட்ட கலாசார இணைப்பாளர் ஏ.எல் தெளபீக், சம்மாந்துறை பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மி எம் மூஸா,உட்பட பல கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
பாவலர் பஸீல் காரியப்பரை பற்றிய அறிமுகவுரையினை ஒய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஏ.சி இஸ்மாலெப்பை அவர்களால் நிகழ்த்தப்பட்டதோடு நினைப்புப் பேருரையினை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இவ் நினைவுப் பேருரையில் பேருரையாளர் அறிமுத்தினை உதவிப் பிரதேச செயலாளர் அஸ்லம் அவர்கள் சிறப்பாக நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.