Ads Area

விசாக் காலம் முடிவடைந்தும் சவுதியை விட்டு வெளியேறாவிட்டால் 50 ஆயிரம் ரியால் அபராதம் மற்றும் சிறை.


நுழைவு விசா காலாவதியான பிறகு சவுதி அரேபியாவை விட்டு வெளியேறத் தவறும் வெளிநாட்டவர்களுக்கு SR50,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 


தற்போது நடைமுறையில் உள்ள ஹஜ் மற்றும் உம்ராவுக்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.


சவுதி அரேபியாவில் ஒரு வாரத்திற்குள் 20,668 சட்ட விரோத குடியிருப்பாளர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 16 வரை பாதுகாப்புப் படைகள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


செய்தி மூலம் - https://www.saudi-expatriates.com

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe