(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை மல்வத்தை - 03 மஜிட்புரம் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி-100 திட்டத்தின் ஊடாக சுமார் 3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிவாசல் முகப்பு தோற்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் மற்றும் அவரது இணைப்பாளர்கள் கண்கானிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேரில் சென்று இப் பள்ளிவாசலினை பார்வையிட்டனர்.