நான் வேறு கட்சி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது கடந்த தேர்தல்களில் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுக்கும், மக்கள் காங்ரஸ் கட்சிக்கும் வாக்களிக்காமல் விட்டதற்கும், மக்களை வாக்களிக்காது தடுத்ததற்கும் உண்மையில் இப்போது மனம் வருந்துகிறேன் என அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் வீரமுனை வட்டார வேட்பாளர்களில் ஒருவரான ரிஸ்விகான் தெரிவித்துள்ளார்.
நேற்று சம்மாந்துறையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்த முன்னைய கட்சியினரிடத்தில் நமது சம்மாந்துறையை அபிவிருத்தி செய்ய எந்தவொரு திட்டங்களும் இல்லை. ஆனால் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களிடம் நமது சம்மாந்துறை மண்ணை அபிவிருத்தி செய்ய பாரிய திட்டங்கள் உள்ளது அதனை இந்த மக்கள் காங்ரஸ் கட்சியில் இணைந்து அவரோடு பழகும் போதுதான் கண்டு கொண்டேன், ஆச்சரிப்பட்டேன்.
இந்த மனிதனுக்காக நாம் வாக்களிக்கவில்லை, இந்தக் கட்சிக்கா நாம் வாங்களிக்கவில்லை. இந்த மனிதருக்கும், கட்சிக்குமான வாக்களிக்க வேண்டாம் என நாம் மக்களை தடுத்து வந்தோம் என மிகவும் மனவேதனையடைந்தேன், அதற்காக நான் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் நமது சம்மாந்துறை மண்ணை நிர்வகிக்க சிறந்த ஆளுமையான ஒருவர்தான் எமது அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் முதன்மை வேட்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள். அவரிடமிருக்கும் ஊரை அபிவிருத்தி செய்யும் திட்டங்களைக் கண்டு மிகவும் ஆச்சரிப்படுகிறேன், உண்மையில் இவரைப் போன்றவர்கள்தான் நமது மண்ணை தவிசாளராக அலக்கரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.