Ads Area

குவைத்தில் மர*ண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பல குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்*குத் தண்டனை.

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலுள்ள பல குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த வாரம் அல்லது வரும் நாட்களில் பல குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்று பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி நாட்டின் தினசரி நாளிதழ் ஒன்று இன்று(22/04/2025) செய்தி வெளியிட்டுள்ளது.


நாட்டின் மத்திய சிறையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அரசு வழக்கறிஞர், உள்துறை அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய துறையின் அதிகாரிகள் முன்னிலையில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படும். 


குவைத்தில் கடைசியாக மரணதண்டனை இந்த ஆண்டு ஜனவரி-18,2025 அன்று  நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் தூக்கிலிடப்பட்டனர் மற்றும் 2 பெருக்கு அவர்களால் கொலை செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கியதால் தூக்கிலிடும் முடிவு கடைசி நிமிடங்களில் நிறுத்தப்பட்டன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe