Ads Area

6 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம்.

 (பாறுக் ஷிஹான்)


தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட 6 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில்  ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர்  காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.


குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் உட்பட ஆறு பேர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் புதன்கிழமை (16)   சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்கள் தலா ரூபா 50 ஆயிரம் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் குறித்த வழக்கு தவணையை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.


செவ்வாய்க்கிழமை(15) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன்  காயமடைந்து வைத் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


தேசிய காங்கிரஸின் வீரமுனை  வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீலை  தேசிய காங்கிரஸ்  தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்திருந்தார்.


சம்பவ தினத்தன்று  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வருகை தந்து சென்ற பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உட்பட ஆதரவாளர்களால்  வீரமுனை  வட்டார வேட்பாளர் ஏ.சி.எம்.சஹீல் உட்பட அவரது ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe