உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்ற சவால்கள், சதிகள், ஆபத்துக்களை சரிவர விளங்கிக் கொள்ளாமல் எவரும் பிழையான தீர்மானங்களை எடுக்க வேண்டாம்.
சம்மாந்துறை மக்கள் ஐக்கியத்தைக் கடைபிடித்து பெருந்தலைவர் அஷ்ரப் உருவாக்கிய நமது தேசிய விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் முஸ்லிம்களின் ஒரே குரல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தான் என்பதனை அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும் உரத்துக் கூற வேண்டும். அனைத்து பேதங்களையும் மறந்து மரச்சின்னத்திற்கு வாக்களித்து முஸ்லிம்கள் தாய்க்கட்சியான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்,.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மரச் சின்னத்தில் விளினையடி வட்டாரத்தில் போட்டியிடுகின்ற சட்டத்தரணி எம்.எம். சகுபீரின் கட்சி கிளைக் காரியாலயம் நேற்றுமுன்தினம்(18)பௌஸி மாவத்தை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
பட்டியல் வேட்பாளர் எம்.ஏ. சலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையிலே - இன்று முஸ்லிம் காங்கிரஸ் சரியான பாதையில் நிதானமாக நேர்மையான தலைமைத்துவத்தின் கீழ் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதன் பலத்தினை உடைக்க இன்று பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதற்கு நாம் பலிக்கடாவாக மாறமுடியாது. எமது இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதன் தலைமையை ஊக்குவிக்க வேண்டும். அது எமது கடமை. அப்போதுதான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம்.
இன்று தேசிய அரசியலில் காணப்படுகின்ற பேரினவாதப் போக்குகளைக் கடந்து, எமது உரிமைகளையும் அபிலாஷைகளையும் வென்றெடுப்பதற்காக வேறுபட்ட புதிய உபாயங்களை உருவாக்கிப் போராடுவதற்கு பெரும் பலமாக எமது கட்சியின் மக்கள் பலம் ஒற்றுமைப்பட வேண்டும். அதற்கு இந்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.
இந்தத் தேர்தலிலே முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்ற சவால்கள், சதிகள், ஆபத்துக்களை சரிவர விளங்கிக் கொள்ளாமல் எவரும் பிழையான தீர்மானங்களை எடுக்க வேண்டாம்.
முஸ்லிம் மக்களுக்குரிய ஒரேயொரு தேசிய பலம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். முஸ்லிம்களின் சக்தியும் அதுதான். இக்கட்சியனை நம்புங்கள். இன்று பெரும் இயக்கத்தினை சீர்குலைக்க பல்வேறு சதிமுயற்சிகள் நடக்கின்றன. அதிலிருந்து பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை சம்மாந்துறை பிரதேச சபையின் ஆட்சியை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும். அதற்கு சிறந்த அனுவமுள்ள இளம் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளோம்.
எனவே, இத்தேர்தலில் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கு அப்பால் சம்மாந்துறை மக்கள் ஐக்கியத்தைக் கடைபிடித்து பெருந்தலைவர் அஷ்ரப் உருவாக்கிய நமது தேசிய விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் வட்டார வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கரந்து கொண்டனர்கள்.