வீரமுனை வட்டாரத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், மகளிருக்கான பிரத்தியேக தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் மக்கள் சந்திப்பும் அண்மையில் உற்சாகமாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது அகில இலங்கை மக்கள் காங்ரஸின் வீரமுனை வட்டார வேட்பாளர் M.I.M. ரிஸ்விக்கான் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை கௌரவ உறுப்பினருமான ILM. மாஹிர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மக்களுக்கு உரையாற்றினார்.
பல்வேறு கட்சி உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு, எதிர்வரும் தேர்தலில் தங்கள் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினர்.
- ஊடகப் பிரிவு -