சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கு தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் மொஹமட் லஃபர் தாஹிர் மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது நிராகரித்துள்ளது.
கிரிபத்கொடையில் அரசுக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரணவீரவை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) முயன்று வருகிறது.
ரணவீர மற்றும் மற்றொரு சந்தேக நபரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.