சம்மாந்துறையில் நில அளவை திணைக்களத்திற்கு நிரந்தரமான கட்டிடம் இன்மையால் இதுவரை காலமும் பிரதேச சபை கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
குறித்த கட்டிடத்தில் போதியளவு வசதிவாய்ப்புகள் இல்லாமையால் நில அளவைத் திணைக்களத்தினால் சம்மாந்துறை பிரதேச செயலாளருக்கு விடுத்த கோரிக்கைக்கமைய பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் முயற்சியால் சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸிற்கு சொந்தமான கட்டிடம் நேற்று (23) நில அளவைத் திணைக்களத்திற்கு பிரதேச செயலாளர் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாரை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவின் ஆலோசனையின் பெயரிலும் பிரதேச செயலாளரின் முயற்சியாலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் நில அளவைத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் ஜி.ஆர்.எல் பெரேரா,
சம்மாந்துறை பிரதேச நில அளவை அத்தியட்சகர் ஏ.எஸ்.எம் நஜாகத்,சென் ஜோன்ஸ் அம்புயூலன்ஸ் மாவட்ட ஆணையாளர் கெப்டன் எம்.டி நெளஸாத்,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நில அளவைத் திணைக்களத்திற்கான இவ் கட்டிடம் வழங்கப்பட்டதனால் சம்மாந்துறை, இறக்காமம் ,சென்றல்கேம்ப் போன்ற பிரதேசங்களின் உள்ள பொது மக்கள் நன்மையடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.