14 வயது மாணவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தெவிநுவரவில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 39 வயது புவியியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தாயை இழந்து தந்தையால் கைவிடப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவியான குறித்த சிறுமி, தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சிறுமியுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதாகவும், சிறுமியின் தாத்தா பாட்டியிடம் நல்ல பெயர் பெறுவதற்காக அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு பரிசுகளுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, குறித்த ஆசிரியர் மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகவும் தாத்தா-பாட்டியிடம் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.