Ads Area

சவுதி இளவரசர் முகமதுபின் சல்மானுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பு..!!

ரியாத் வந்த அதிபர் டொனால்டு டிரம்பை அந்நாட்டு இளவரசர் முகமதுபின் சல்மான் நேரில் சென்று வரவேற்றார். அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், 4 நாட்கள் அரசு முறை பயணமாக டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ரியாத் வந்த டிரம்பை சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.


அதன்பின் அதிபர் டொனால்டு டிரம்பும், முகமதுபின் சல்மானும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஈரான் விவகாரம், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். சவுதி பயணத்தை நிறைவு செய்த பின் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் பயணம் மேற்கொண்டார். அதிபராக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe