எஸ்.எம்.எம்.முர்ஷித்.
கடற்கொள்ளையர்களின்அட்டகாசங்களுக்கு முடிவு கட்டக்கோரி வாழைச்சேனையில் இன்று (13) கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் அல்ஸபா, அல் அமான் வியாபாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டம் இன்று (13) காலை வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் மீனவர்கள், பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல கோசங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி தனது எதிர்ப்பைத்தெரிவித்தனர்.
பின்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டார அவர்களிடம் வாழைச்சேனை மீன்பிடி சங்கப் பிரதிநிதிகளால் மகஜரும் கையளிக்கப்பட்டது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு என்னால் முடியுமான வரை, ஒரு வார காலத்துக்குள் தீர்வினைப் பெற்றுத்தருவாதாகக் கூறினார். பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது.
இதில் மீனவர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், படகு உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகளளும் கலந்து கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.