(சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ், அகமட் கபீர் ஹஷான் அஹமட், ஐப்பார் றோசன் அக்தர், ஷாதிர் ஏ ஐப்பார்)
வெசாக் போயா தினத்தையொட்டி கடலை அன்னதான நிகழ்வு நேற்று (12) திங்கட்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய முற்றத்தில் நடைபெற்றது.
இதன் போது, சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறை பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.