(அகமட் கபீர் ஹஷான் அஹமட்)
சம்மாந்துறை இளமானிப்பட்டதாரிகள் அமைப்பின் மூன்றாவது வருடாந்த பொதுக் கூட்டம் இன்று (2025.05.11) சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில், மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியும் சம்மாந்துறை இளமானிப்பட்டதாரிகள் அமைப்பின் தலைவருமான எம்.எஸ். ஹினாஸ் அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பட்டதாரியும், சம்மாந்துறை இளமானிப்பட்டதாரிகள் அமைப்பின் (மகளிர் அணி) உப தலைவியுமான எம்.என்.பாத்திமா நுஸ்கா வரவேற்புரையினை நிகழ்த்தியதுடன், கடந்த வருட கூட்டறிக்கை மற்றும் செயற்பாட்டு அறிக்கையினை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட இறுதி ஆண்டு மாணவனும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினுடைய மஜ்லிஸ் இணைப்புகளுக்கான பணிப்பாளரும் சம்மாந்துறை இளமானிப்பட்டதாரிகள் அமைப்பின் செயலாளருமான ஏ.எஃப்.எம். ரஜ்வான் வழங்கியதுடன், வருடாந்த நிதி அறிக்கையினை ருஹுனு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட இறுதி ஆண்டு மாணவனும் சம்மாந்துறை இளமானிப்பட்டதாரிகள் அமைப்பின் பொருளாளருமான ஏ.ஆர்.முகம்மட் சிபான் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வுக்கு மென்பொருள் பொறியியலாளரும் சம்மாந்துறை இளமானிப்பட்டதாரிகள் அமைப்பின் ஸ்தாபக தலைவருமான கே.எம்.தஸ்னீம் அவர்களும் வவுனியா பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பட்டதாரியும் சம்மாந்துறை இளமானிப்பட்டதாரிகள் அமைப்பின் முன்னாள் உப தலைவியுமான செட்.ஏ.நஸ்லூன் சிப்னா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினருக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதுடன் கடந்த நிருவாகத்தில் சேவையாற்றியோரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.