ஜனாதிபதி செயலகத்தினால் சத்திர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி இம்முறை நிகழ்நிலை( Online) மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு இவ்வுதவி வழங்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கமைய பிரதேச செயலகங்களின் ஊடாக நிகழ்நிலை அடிப்படையில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறுகின்றன.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் முதன்முதலாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட நான்கு நிகழ்நிலை விண்ணப்பங்களிலிருந்து இரண்டாம் கட்டமாக மூவர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிதியுதவி வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் (05) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த மருத்துவ உதவிற்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம் LLB, கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,,சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம் சாபிர்,கிராம நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம் நளீர், அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மட் ரிபாஸ்,கிராம சேவை உத்தியோகத்தர் ஜே.சாம் டிலோஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கான , அரசாங்கத்தின் சேவைகளை கொண்டு சேர்ப்பதில் சம்மாந்துறை பிரதேச செயலகம் முன்மாதிரியாக செயற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சனாதிபதி நிதியத்தினை சாதாரண பொதுமக்கள் இதுவரை பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து கொழும்பிற்கு சென்று நடைமுறைகளை பின்பற்றிய பெற்றுவந்தனர். இதனால் வருடாந்தம் சிலருக்கே இக்கொடுப்பணவு கிடைத்தது.
ஆனால் தற்போதைய அரசாங்கம் இச்சேவையினை நிகழ்நிலைப்படுத்தி அதன் செயற்பாட்டை பிரதேச செயலங்கள் ஊடாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தமையால் இரு மாதங்களுக்குள் நான்கு (4) பயனாளிகளுக்கு எவ்வித செலவுகளுமின்றி எமது பிரதேச செயலகத்தினுடாக விண்ணப்பித்து ஒரு வாரத்திற்குள் கொடுப்பணவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு விட்டன.
கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொடுப்பணவு மற்றும் இதுவரை கூடிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுற்குட்பட்ட விளினியடி-03 ஐச் சேர்ந்த யூ.எல் உமர் கர்தா,விளினியடி -02ஐச் சேர்ந்த வை.எல் அலிமா உம்மா,சம்மாந்துறை-01ஐச் சேர்ந்த ஏ.மஹுமூத்லெவ்பை என்பவர்களுக்கு மேற்படி ஜனாதிபதி செயலக நிதியுதவி வழங்கி வைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.