Ads Area

ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பில் ஜெர்மனி சென்றார் ஜனாதிபதி அநுர.

ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank – Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜெர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (10) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க.


இவ்விஜயத்தின் போது  ஜெர்மனியின் ஜனாதிபதி, உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் பிரதானிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். அதன்போது  வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடுகள் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட இருநாட்டினதும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் புதிய வழிகள் குறித்தும் கவனம் செலுத்த எதிர்பார்த்துள்ளார்.


ஜெர்மன் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்திலும் பல வர்த்தக கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் ஜேர்மனியில் வாழும் இலங்கையர்களை சந்திப்பதற்கும்  எதிர்பார்த்துள்ளார்.


வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இவ்விஜயத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe