அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (25) காலை 8.00 மணி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ளது.
கிராமப்புற மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம், பற்றாக்குறை காரணமாக மருந்துகளை வாங்குமாறு நோயாளிகளை அரசாங்கம் அழுத்தம் கொடுப்பது மற்றும் தரமான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் இல்லாததால் இலவச சுகாதார அமைப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக GMOA தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்திற்குள் ஒழுங்கற்ற மற்றும் திறமையற்ற நடைமுறைகள் காரணமாக தொலைதூரப் பகுதிகளுக்கு மருத்துவர்களை மாற்றும் முறை "கிட்டத்தட்ட முற்றிலுமாக சரிந்துவிட்டது" என்றும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கிட்டத்தட்ட 200 மருத்துவமனைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன என்றும், அதே நேரத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் மற்ற மருத்துவமனைகளில் பல பிரிவுகளும் சீர்குலைந்து போகக்கூடும் என்றும் அது எச்சரித்தது.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.