Ads Area

சம்மாந்துறை சுகாதாரப்பிரிவினரால் தெருநாய்களுக்கு தடுப்பு மருந்து.

 பாறுக் ஷிஹான்.

 

பொதுமக்களுக்குச் சிறந்த, பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் பொருட்டு சம்மாந்துறை சுகாதாரப்பிரிவினர்  வெறிநாய் கடி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


சம்மாந்துறை பிரதேச செயலக வளாகத்திலும் தள வைத்தியசாலை வளாகத்திலும் நான்கு பேரை தெருநாய்கள் கடித்தன.


இது குறித்து தகவல் அறிந்ததும் மேற்பார்வை பொதுச் சுகாதாரப்பரிசோதகர் மற்றும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டனர்.


கடித்த நாய் 24 மணி நேரத்திற்குள் இறந்த நிலையில்  அதன் தலை உடனடியாகத்துண்டிக்கப்பட்டு வெறிநாய் கடித்தலுக்கான (Rabies) பரிசோதனைக்காக மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது.


அதே வேளையில், பிரதேச செயலகம் மற்றும் வைத்தியசாலை வளாகங்களிலிருந்த 21 தெருநாய்களுக்கும் வெறிநாய் கடித்தல் தடுப்பு மருந்து (ARV) செலுத்தப்பட்டுள்ளது.


இந்தாண்டில் சம்மாந்துறையில் நடக்கும் இரண்டாவது வெறிநாய் கடி சம்பவம் இதுவாகும்.


சட்டப்படி தெருநாய்களைக்கொல்ல முடியாத காரணத்தால், அவற்றிற்குத் தடுப்பு மருந்துகளைச் செலுத்துவது மட்டுமே தற்போது தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe