சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் இரண்டாவது அமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இவ் அமர்வில் திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாண கட்டழகர் (Bodybuilding) போட்டியில் 75kg–80kg எடைப்பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று, “கிழக்கு கட்டழகர்” என்ற விருதைப் பெற்று சம்மாந்துறை மண்ணுக்கும் பெருமையைத் தேடித்தந்த துறையூர் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர் யோஷுவாவின் சாதனையை பாராட்டி கெளரவித்து ஊக்குவிக்கும் நோக்கில் (50,000/=) ஐம்பது ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.