குவைத்தில் கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட பாதிப்புகளால் நாட்டின் பல்வேறு பகுதியில் வசிக்கின்ற இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் 63 பேர் வரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஃபர்வானியா மற்றும் அதான் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்று வரையில் 13 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த 23 பேரில் கேரளா, தமிழகம், ஆந்திரா, லக்னோ, மும்பை ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் அடங்குவர். 23 பேரில் உயிரிழந்த இருவர் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று மருத்துவமனை தொடர்புடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவருடைய கூடுதல் விபரங்கள் வெளியாகியுள்ளது.